செல்ல பிராணிகளை வளர்ப்பதை விட அதிக குழந்தைகளை பெற்று கொள்ள போப் அறிவுறுத்தல்!!
இத்தாலிய இளைய தம்பதியினர் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார். இத்தாலியில் கடந்த ஆண்டின் குழந்தைகள் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிதும் குறைந்துள்ளது. பணி சுமை, பொருளாதார சூழல்கள் காரணமாக இளைய தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்வது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாலியில் கடந்த ஆண்டில் 4 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 2033ம் ஆண்டுக்குள் ஆண்டு குழந்தை பிறப்பு விகிதத்தை 5 லட்சமாக அதிகரிக்கும் பிரசாரங்களில் பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் “இத்தாலியில் அதிக குழந்தைகளை பெற்று கொள்வது பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியம். பொருளாதார சிக்கல்களால் தான் இளைய தம்பதியினர் குழந்தைகளை பெற்று கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் பணிக்கான ஊதியம் அதிகரிக்க வேண்டும். இளைய தம்பதிகள் வீட்டில் செல்ல பிராணிகளை அதிகம் வளர்ப்பதை விட, அதிக குழந்தைகளை பெற்று கொண்டு வளர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் எதிர்காலத்தை விதைப்பது அவசியம்” என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.