தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற குறித்த கூட்டத்திற்கு பின்னர் இரண்டு நபர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கமே மோதலுக்கு காரணம் என தெரிய வருகிறது.
தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.