பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி- ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் என்கவுண்டர் !!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அன்ட்வான் சாகம் பகுதியில் இன்று காலை என்கவுன்டர் நடந்தது. ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், நேற்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாகிஸ்தான் தரப்பில் குவாட்காப்டரை பறக்கவிட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இதில், இந்திய ராணுவ வீரர்கள் என்கவுண்டர் நடத்தி பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். கடந்த மே 3ம் தேதி அன்று, இந்திய ராணுவம் குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.