நிர்வாண பூஜை செய்து 3 இளம்பெண்கள் பலாத்காரம்- போலி சாமியார் தப்பி ஓட்டம்!!
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பொன்னே கல்லுவை சேர்ந்தவர் 35 வயது போலி சாமியார். இளம் பெண்களை வைத்து நிர்வாண பூஜை செய்தால் அதிக அளவில் பணம் கிடைக்கும் என கூறி வந்தார். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இதனை கண்ட சிலக்கலூருபேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் போலி சாமியாரை தொடர்பு கொண்டார். அப்போது போலி சாமியார் நிர்வாண பூஜைக்காக பெண்களை அழைத்து வந்தால் அதிக அளவில் பணம் கொடுப்பதாக தெரிவித்தார்.
அந்த பெண் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரு பகுதியை சேர்ந்த 3 இளம்பெண்களிடம் அதிக அளவில் பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்தார். இதையடுத்து போலி சாமியார் 3 இளம்பெண்களையும் விஜயவாடா, ஓங்கோல், குண்டூர், பொன்னே கல்லு உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு நிர்வான பூஜை செய்து பலாத்காரம் செய்தார். பின்னர் போலி சாமியார் இளம்பெண்களை காரில் ஏற்றி கொண்டு குண்டூர் அருகே உள்ள அமராவதி சாலையில் இறக்கி விட்டு தப்பி சென்றார்.
போலி சாமியார் தங்களை ஏமாற்றியதால் விரக்தி அடைந்த இளம்பெண்கள் சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு நல்ல பாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்களை மீட்டு விசாரணை நடத்தினர். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியார், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் மற்றும் 3 வாலிபர்களை தேடி வருகின்றனர்.