;
Athirady Tamil News

குஜராத்தில் கிருஷ்ணாசாகர் ஏரியில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு !!

0

குஜராத் மாநிலம் பொடாட் நகரில் உள்ள கிருஷ்ணா சாகர் ஏரியில் குளிப்பதற்காக சிறுவர்கள் 5 பேர் நேற்று மதியம் சென்றுள்ளனர். முதலில் 2 சிறுவர்கள் ஏரியில் இறங்கி நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நீருக்குள் திடீரென மூழ்கத் தொடங்கினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கரையில் இருந்த மூன்று சிறுவர்களும் ஏரியில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயன்று ஏரியில் குதித்தனர்.

ஆனால், அவர்களும் நீரில் மூழ்கினர். இதில், 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.