கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு !!
நாட்டில் கடந்த 12ஆம் திகதி மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது.