ஒரே வீட்டிலிருந்த 4 சிறுவர்கள் மாயம் !!
நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
01 வயது, 03 மாதங்கள், 10 மற்றும் 13 வயதுடைய நான்கு சிறுவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்களின் பெற்றோர்கள் நெலுவ பிரதேசத்திலுள்ள தோட்டங்களில் தற்காலிகமாக தொழில் செய்வதற்காக மியானதுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கி தங்கியிருந்த நிலையில் நேற்றிரவு முதல் பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் 119 இற்கு அறிவித்துள்ளது.
காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.