வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணை!!
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியிடம் நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெடுக்குநாறி மலை ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஒருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை (12) விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று சனிக்கிழமை (13) விசாரணையொன்றுக்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆலயத்தின் பூசாரி மற்றும் அவரது மனைவியை நெடுங்கேணி பொலிஸார் அழைத்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு சென்ற அவ்விருவரிடமும் பொலிஸார் சில கேள்விகளை வினவினர்.
2019ஆம் ஆண்டு மலையில் ஏணிப்படி வைத்தது யார், அதற்கு நிதி வழங்கியது யார் போன்ற விடயங்களை பற்றி கேட்டு மூன்று மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதனையடுத்து, இன்று (14) ஆலய பரிபாலன சபையின் போசகர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிவபூமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் ஆறு திருமுருகனிடம் யாழில் வைத்து நெடுங்கேணி பொலிஸார் நேற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது புதிதாக வழங்கப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டது.
இந்நிலையில், “எங்கள் மீதான விசாரணைகளே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்த சந்தேக நபரையும் நெடுங்கேணி பொலிஸார் கைதுசெய்யவில்லை. யாரும் விசாரிக்கப்படவும் இல்லை” என்று ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயம் குறித்து ஆதங்கப்படுகின்றனர்.
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு விஜயம்!!
வெடுக்குநாறிமலை விவகாரம்: விக்கிரகங்களை வைக்க நீதிமன்றம் உத்தரவு !!
இன – மத ரீதியான வன்முறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது – டக்ளஸ்!!
இன அழிப்பின் தொடர்ச்சியே வெடுக்குநாரி மலை பாரம்பரிய வழிபாட்டு ஸ்தலத்தின் சிதைப்பு – மணிவண்ணன்!!
ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு!! (PHOTOS)
வெடுக்குநாறியில் அட்டகாசம்: ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளது !!
ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து சைவ அமைப்பினர் யாழில் போராட்டம்!! (PHOTOS)