;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட பரிசு !!

0

Royal Australian Air Force Beechcraft KA350 விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறித்த விமானத்தை இலங்கைக்கு பரிசளிப்பதற்கான அவுஸ்திரேலியாவின் உள்துறை விவகார அமைச்சரின் கடிதத்தை, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

இந்த பரிசு இலங்கையின் கடல் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும். மேலும் இது நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.