14 இலட்சம் பிள்ளைகளுக்கு காலை உணவு இல்லை!!
இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை. அல்லது எந்தவோர் உணவையும் உட்கொள்வதில் என்பது வைத்திய பரிசோதனை தகவல்களின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இது பொருளாதார பாதுகாப்பினால் ஏற்பட்டிருக்கும் அழுத்தமாகுமென பாராளுமன்ற உறுப்பினரும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவருமான காமினி வலேபொட தெரிவித்தார்.
காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சோதனைகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.