;
Athirady Tamil News

தொடர்ந்து உதவுவோம் என ஜெர்மன் உறுதி ரஷ்யாவை தாக்க உக்ரைன் படைகள் தயாராகிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்!!

0

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு உக்ரைன் படைகள் தயாராகி வருவதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஓராண்டை கடந்து நீடித்து வரும் இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்கள் சிதிலமடைந்துள்ளன. உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநாவும், பிற நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் நடுநிலை வகிக்கின்றன.

இதனிடையே ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகள் பொருளாதாரம், ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு மேலும் உதவிகளை கேட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேட்டோ நட்பு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இத்தாலிக்கு சென்ற அவர் போப் பிரான்சிஸ் மற்றும் இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து ஜெர்மன் நாட்டுக்கு சென்ற அவர் ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்சை சந்தித்து ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஜெர்மன் அளித்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவுக்கு எதிராக போரிட உக்ரைன் படைகள் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல் பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். இதில் வெற்றி பெறுவோம்.

இந்த தாக்குதல் ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன் பகுதிகளை மீட்பதை நோக்கமாக கொண்டது” என்று தெரிவித்தார்.நிருபர்களிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், “ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தேவைப்படும் வரை உதவிகளை செய்ய ஜெர்மன் தயாராக உள்ளது” என்றார். தொடக்கத்தில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்க தயங்கிய ஜெர்மன் தற்போது தொடர்ந்து உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.