ஜனாதிபதியுடன் இணைந்தார் ஹரிசன்!!
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர மாவட்டத் தலைவருமான பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி நாட்டிற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கியுள்ளதால், தான் அவருக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஹஹரிசன் தெரிவித்தார்.
ஒரு அரசியல்வாதியால் பொதுவெளியில் வந்து கூட்டம் நடத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் ஜனாதிபதி ரஒில் விக்கிரமசிங்க அந்த நிலையை எல்லாம் மாற்றி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிக்கின்றார்.
சுமார் 20 ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.