ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன கடிதம்- பிரதமர் மோடி வழங்குகிறார்!!
நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 71 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நாளை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி நாளை 45 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார். இத்திட்டத்தை ஆதரிக்கும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், கிராமின் தக் சேவகர்கள், பணியிட ஆய்வாளர் உள்பட பல்வேறு பதவிகளில் சேர உள்ளனர்.