பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி- காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!!
காஷ்மீரில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட், யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஜம்மு காஷ்மீர், முஜாக்தீன் கஸ்வத் உல்ஹிந்த், ஜம்மு காஷ்மீர் சுதந்திர போராட்ட இயக்கம், காஷ்மீர் புலிகள், பி.ஏ.ஏ.எப். உள்ளிட்ட புதிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 11-ந் தேதி பட்கம், பார முல்லா ஆகிய மாவட்டத்தில் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று தெற்கு காஷ்மீரின் புல்வாமா மற்றும் சோபியான் பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்து வருகிறது.