சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி -மீண்டும் பொதுவெளியில் தோன்றினார் புடினின் கூட்டாளி !!
கடுமையாக நோய் வாய்ப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்யாவின் கூட்டாளி நாடான பெலாரஸ் இன் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மீண்டும் பொது வெளியில் தோன்றிய புகைப்படம் வெளியாகி உள்ளது.
வெளியாகிய இந்த புகைப்படத்தில் அவர் பெலாரஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விக்டர் க்ரெனினிடம் இருந்து சல்யூட் பெறுவதைக் காட்டுகிறது.
மே 9 அன்று மொஸ்கோவில் நடந்த வெற்றி தின அணிவகுப்பில் லுகாஷென்கோ கலந்து கொண்டார், ஆனால் அவர் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்கவில்லை, அவசரமாக தலைநகர் மின்ஸ்க் திரும்பினார். அவர் கையில் கட்டு இருந்ததை பத்திரிகையாளர்கள் கவனித்தனர்.
லுகாஷென்கோ மின்ஸ்கில் தனது பாரம்பரிய வெற்றி தின உரையை நிகழ்த்தவில்லை.
பாரம்பரிய வெற்றி தின உரை
மே மாத தொடக்கத்தில் இருந்து லுகாஷென்கோ கணிசமாக பொது இடங்களுக்கு விஜயம் செய்யவில்லை என ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
மே 13 அன்று, மக்கள் பார்வையில் இருந்து நீண்ட காலத்திற்குப் பிறகு, லுகாஷென்கோ, மின்ஸ்க் ஒப்லாஸ்டில் டிராஸ்டி குடியேற்றத்தில் உள்ள அதிபர் மருத்துவமனைக்குச் சென்றார்.
மே 14 அன்று, பெலாரஸின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் அவர் தோன்றவில்லை.
ரஷ்ய ஸ்டேட் டுமா [ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் அறை] பெலாரஸின் அதிபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தியது, ஆனால் அவருக்கு என்ன நோய் என்று குறிப்பிடவில்லை.