“இதுதான் லண்டன் பிளான்..” அவங்க திட்டமே வேற.. உடைத்து பேசிய இம்ரான் கான்! பதறும் பாகிஸ்தான் மக்கள்!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது, விடுதலை என அங்கே பெரும் குழப்பம் நிலவி வரும் நிலையில், இம்ரான் கான் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராகக் கடந்தாண்டு வரை இருந்தவர் இம்ரான் கான். பாகிஸ்தான் பல காலமாகவே கடுமையான பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. அது அத்தனைக்கும் இம்ரான் கான் தீர்வு வழங்குவார் என்றே அங்குள்ள மக்கள் நம்பினர். இதன் காரணமாகவே கடந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சிக்கு அதிகப்படியான மக்கள் ஆதரவு வழங்கினர்.. இம்ரான் கான் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
பாகிஸ்தான்: இதையடுத்து இம்ரான் கான் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தார். முதல் சில ஆண்டுகள் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. இருப்பினும், எப்போது இம்ரான் கான் ராணுவம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினாரோ அப்போது பிரச்சினை ஆரம்பித்தது. பாகிஸ்தானில் ராணுவத்தைப் பகைத்த யாரும் ஆட்சியில் நீட்டித்தது இல்லை. அங்கே ராணுவம் அந்தளவுக்கு வலிமையானது. இதனால் இம்ரான் கான் கூட்டணி கட்சியினர் வரிசையாக ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால் இம்ரான் கான் கடந்தாண்டு பிரதமர் பதவியை இழந்தார். எப்போது அவர் பிரதமர் பதவியை இழந்தாரோ அப்போதே இம்ரான் கான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.. இருப்பினும், இம்ரான் கான் கைதாவதைத் தவிர்த்தே வந்தார். இந்தச் சூழலில் தான் அவர் கடந்த வாரம் வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜரான போது, அவர் கைது செய்யப்பட்டார்.
துரோகிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை..ஈபிஎஸ் பரபர துரோகிகள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள்.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை..ஈபிஎஸ் பரபர 70 வயதான இம்ரான் கானை கைது செய்ததைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறி, உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டது. இம்ரான் கான் கைதை கண்டித்து சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் கைது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து இம்ரான் கான் வெளியே வந்துள்ளார். இந்தச் சூழலில் இம்ரான் சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
லண்டன் பிளான்: அதாவது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருப்பதே ராணுவத்தின் திட்டம் என இம்ரான் கான் விமர்சித்துள்ளார். இம்ரான் கான் இது குறித்து தனது ட்விட்டரில், “இது தான் லண்டன் திட்டம்.. இந்த லண்டன் திட்டம் இப்போது முழுமையாக இங்கே வெளிவந்துள்ளது. நான் சிறைக்குள் இருந்தபோது வன்முறை ஏற்பட்டதாகச் சொல்லி, அவர்கள் பல்வேறு விஷயத்தைச் செய்யத் திட்டமிட்டிருந்தனர். என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு என்ன நடக்கும்? மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு எனது மனைவி புஷ்ரா பேகத்தை (கானின் மனைவி) சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்துவதே அவர்கள் திட்டம். மேலும், சில தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்னைச் சிறையில் அடைப்பதும்தான் இப்போது அவர்கள் திட்டம். இம்ரான் கான்: இதற்காக அவர்கள் இரண்டு விஷயங்களைத் திட்டமிட்டுச் செய்தார்கள்.
முதலில் பிடிஐ கட்சியினர் திட்டமிட்டு வன்முறையைக் கிளப்பியதாக ஒரு இமேஜை கொண்டு வந்தனர். இரண்டாவதாக, ஊடகங்கள் முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர். நாளை என்னைக் கைது செய்தால், மக்கள் போராட வெளியே வரக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இது திட்டமிட்ட ஒரு பிளான். நாளையும் மீண்டும் இணையச் சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களைத் தடை செய்வார்கள்.. வீடுகளில் அத்துமீறி நுழைந்து, போலீசார் பெண்கள் மீது கை வைக்கிறார்கள். இதெல்லாம் எந்த விதத்தில் சரி. பாகிஸ்தான் மக்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை நான் நாட்டிற்காகப் போராடுவேன். மோசடிகளுக்கு அடிமையாக இருப்பதை விட மரணத்தை நான் தேர்ந்தெடுப்பேன்.
நான் கடவுளைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்கமாட்டேன் என்றே உறுதிமொழி எடுத்துள்ளேன். இப்போது பயத்திற்கு நாம் தலைவணங்கினால், நம் எதிர்கால சந்ததியினருக்கு அவமானமும், சிதைவும்தான் ஏற்படும். அநீதி நிலவும் நாடுகளில், நீண்ட காலம் வாழ முடியாது. உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்படும் நாடகம் தான் இது. 1997ஆம் ஆண்டு ஷெரீப்பின் கட்சியைச் சேர்ந்த ரவுடிகள் உச்ச நீதிமன்றத்தைத் தாக்கி, மிகவும் மரியாதைக்குரிய தலைமை நீதிபதிகளில் ஒருவரான சஜ்ஜத் அலி ஷாவை நீக்கினர். உச்ச நீதிமன்றத்தின் மீதான இத்தகைய வெட்கக்கேடான தாக்குதலைப் பாகிஸ்தான் ஏற்கனவே பார்த்திருக்கிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.