செப்., ஒக்டோபரில் பேச்சு முடியும் !!
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதலாவது மதிப்பாய்வு மூலம் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்துக்குள் முடிவடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் 3 சதவீதமாக சுருங்கும் என்றும் 2024 இல் 1.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுடன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக தொடர்ச்சியான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது, இது மேக்ரோ பொருளாதார இலக்குகளை எட்டுவதை உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.