முதியவர்களுக்கான தனிச்சிறப்பான இட மாற்று சிகிச்சை பராமரிப்பின் பயன்கள்!!
இந்தியாவில் முதியவர்களுக்கு, குறிப்பாக அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய காலம் மற்றும் நோயிலிருந்து மீண்டு குணமடையும் காலம் ஆகிய சூழலில் இட மாற்று பராமரிப்பு சேவை என்பது, சிகிச்சையின் ஒரு அத்தியாவசிய அங்கமாக இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு மீண்டும் அனுமதிக்கப்படும் நிகழ்வுகளை குறைப்பது, இணை நோய்கள் மீது சிறப்பான கட்டுப்பாடு & மேலாண்மை, முன்னேற்றம் கண்டிருக்கும் உடலியக்க விளைவுகள், நோயாளிக்கும் மற்றும் பராமரிப்பாளருக்கும் மேம்பட்ட திருப்தி ஆகியவை இப்பயன்களுள் சிலவாகும். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு தனிச்சிறப்பான இட மாற்று பராமரிப்பின் ஆதாயங்களை இக்கட்டுரை ஆராய்கிறது; இதன் திறன்மிக்க செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான கொள்கை மற்றும் செயல் நடைமுறைகளுக்கான பரிந்துரைகளையும் இது முன்வைக்கிறது.
இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதைப்போலவே அவர்களது தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுகாதார சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அறுவை சிகிச்சை அல்லது ஒரு தீவிர நோய் பாதிப்பிற்கு பிறகு முதியவர்களுக்கு சிறப்பான மாறுநிலை பராமரிப்பிற்கான வசதி ஏற்பாடு என்பது, கவலைக்குரிய ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. மருத்துவமனைகள், மறுவாழ்வு மையங்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு போன்ற வேறுபட்ட உடல்நல சிகிச்சை அமைவிடங்களுக்கு இடையே நோயாளிகள் மாறுகின்றபோது அவர்களுக்கு வழங்கப்படும் பராமரிப்பே இட மாற்று பராமரிப்பு (transition care) என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதியோருக்கான சிறப்பு இட மாற்று பராமரிப்பு ஏற்பாட்டின் பயன்கள்:
•மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவது குறையும்: அறுவை சிகிச்சைக்குப் பிறகு அல்லது ஒரு தீவிர நோய் பாதிப்பிற்கு பிறகு வயதான நோயாளிகளுக்கு முறையான கட்டமைப்புடன் ஆதரவளிக்கும் சூழலை வழங்குவதன் மூலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு மீண்டும் சேர்க்கப்படும் நிகழ்வுகளை குறைக்க இந்த தனிச்சிறப்பான இட மாற்று பராமரிப்பு உதவும். உடலின் இன்றியமையா அறிகுறிகளை கண்காணிப்பது, மருந்தளிப்புகளை சரியாக நிர்வகிப்பது மற்றும் குணமடைந்து வரும் செயல்முறையின்போது உருவாகக்கூடிய சிக்கல்களையும் உடனடியாக கவனிப்பது ஆகியவை இதில் உள்ளடங்கும். •இணைநோய்களின் சிறப்பான மேலாண்மை வயதான நோயாளிகளுக்கு பல்வேறு நாட்பட்ட நோய்கள் இருப்பதால், அவர்கள் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடையும் செயல்முறையை இந்நோய்கள் பாதிக்கக்கூடும். நோயாளிகளின் உடல்நலத்தின் மீது நெருக்கமான கண்காணிப்பு மற்றும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இடையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் இந்த இணை நோய்களை சரியாக நிர்வகிக்க தனிச்சிறப்பான இட மாற்று பராமரிப்பு உதவக்கூடும்.
•இட மாற்று பராமரிப்பில் பெரும்பாலும் உடல்சார் சிகிச்சை முறை, பணி சார்ந்த சிகிச்சை முறை மற்றும் பேச்சு சிகிச்சை முறை போன்ற மறுவாழ்விற்கான சேவைகள் இடம்பெறுகின்றன. முதியோர்கள், அவர்களது உடலியக்க திறன்களையும் தனித்து சுதந்திரமாக செயல்படும் ஆற்றலையும் பெறுவதற்கு இவைகள் உதவக்கூடும். இதன் விளைவாக, அவர்களது வாழ்க்கைத்தரம் மேலும் மேம்படும் மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் மீதான சுமை குறையும். •வயதான நோயாளிகளுக்கும் மற்றும் அவர்களை அக்கறையுடன் பராமரிப்பவர்களுக்கும் ஒரு ஆதரவான மற்றும் இதமான சூழலை இட மாற்று பராமரிப்பு வழங்கமுடியும். சிகிச்சை திட்டங்களை சிறப்பாக கடைப்பிடிப்பதற்கும் மற்றும் மேம்பட்ட திருப்திக்கும் இது வழிவகுக்கும்.
•வயதான நோயாளிகளுக்கான பராமரிப்பில் கணிசமான கவலையளிக்கும் அம்சமாக மனஅழுத்தமும், சலிப்பும் இருக்கிறது. இத்தகைய நிலையில், நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்கள் மீது வைக்கப்படும் சுமையையும், மனஅழுத்தத்தையும் தணிப்பதற்கு இது உதவும். கொள்கை மற்றும் செயல் நடைமுறைகளுக்கான பரிந்துரைப்புகள்: •இட மாற்று பராமரிப்பிற்கு பிரத்யேக மையங்களை உருவாக்குவது: வயதான நோயாளிகளுக்கு மாறுநிலை பராமரிப்பு மையங்களை பிரத்யேகமாக உருவாக்குவது, நோய் பாதிப்பிலிருந்தும் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டு குணமடைவதற்கு ஒரு சிறப்பான ஆதரவான சூழலை வழங்க உதவக்கூடும்.
மூத்த குடிமக்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்றவாறு விரிவான சிகிச்சை பராமரிப்பை வழங்க அவசியமான சாதனங்களும் மற்றும் பணியாளர்களும் கொண்டதாக இம்மையங்கள் இருக்க வேண்டும். •பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவது: இந்தியாவில் வயதில் முதிர்ந்த நோயாளிகளுக்கு தனிச்சிறப்பான இட மாற்று பராமரிப்பு வழங்கப்படுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது, இச்சேவைகளுக்கான தேவையை உயர்த்துவதற்கு உதவும்; மேலும், இப்பிரிவில் சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும்.
அறுவைசிகிச்சை அல்லது தீவிர நோய் பாதிப்பிற்குப் பிறகு வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சையின் விளைவுகளையும், வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துவதில் தனிச்சிறப்பான இட மாற்று பராமரிப்பு சேவைகள் இன்றியமையா பங்கை ஆற்றக்கூடும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயல்படுத்துவதன் வழியாக மூத்த குடிமக்களுக்கு தனிச்சிறப்பான மாறுநிலை பராமரிப்பு சேவைக்கான வசதியையும் மற்றும் அதன் பயனளிக்கும் திறனையும் அதிகரிக்க உடல்நல சிகிச்சை வழங்குனர்கள், கொள்கை உருவாக்குனர்கள் மற்றும் துறையுடன் தொடர்புடைய பிற பங்குதாரர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றுவது அவசியமாகும். இதன்மூலம் மூத்த குடிமக்கள் உடல்நல பாதிப்புகளிலிருந்து வெற்றிகரமாக மீண்டு குணமடைவதற்கு தேவைப்படும் கவனிப்பையும், ஆதரவையும் பெறுவதை உறுதிசெய்யும் என்று அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் திரு. சீனிவாசன் தெரிவித்தார்.