;
Athirady Tamil News

ஆந்திராவில் ஒரே இடத்தில் 77 வகை மாம்பழங்கள் விற்பனை!!

0

இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம் பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பழ ஆராய்ச்சி நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு சுமார் 4,000 மா மரங்கள் உள்ளன. இந்த பருவத்தில் 77 வகை மாம்பழங்கள் பழுத்து மனம் ருசிக்க ஈர்க்கிறது. ஐதராபாத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாம்பழப் பிரியர்கள் 77 வகை மாம்பழங்களை வாங்கிச் சுவைக்க இங்கு வருகிறார்கள்.

இந்த மாம்பழ ரகங்களை கண்காட்சி மூலம் பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு ரகத்தின் சாகுபடி முறைகள், லாபம் மற்றும் சவால்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கி வருகின்றனர். அஸாம்-உஸ்-சமர் ரக மாம்பழம் விலை உயர்ந்தது, ஒரு கிலோ ரூ.600-க்கும், ஹிமாயத் ரகம் ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்கப்படுகிறது வழக்கமான ரகங்களான பெனிஷான், பெட்டா ரசலு, தாஷேரி, கேசரி, தோதாபுரி, மல்லிகா மற்றும் செருகு ரசலு தவிர, பாம்பே பேடா, கஜூ, தில்பசந்த் மற்றும் ஆசம்-உஸ்-சமார் போன்ற அரிய வகை ரகங்கள் கண்காட்சிகளில் வைத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.