ரூ. 16 ஆயிரம் கோடி கொடுங்க.. ஆப்பிளை கதிகலங்க செய்த புதிய வழக்கு – என்னாச்சு தெரியுமா? !!
ஆப்பிள் ஐபோன் திராட்லிங் பிரச்சினை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆப்பிள் நிறுவனம் 2 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 ஆயிரத்து 358 கோடி) இழப்பீடு வழங்க இங்கிலாந்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னதாக பழைய ஐபோன்களின் வேகத்தை ஆப்பிள் நிறுவனம் வேண்டுமென்றே குறைத்ததை ஒப்புக் கொண்டு அதற்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்து இருந்தது. இந்த சம்பவங்கள் நடந்து சிலகாலம் ஆகிவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் இதேபோன்ற சிக்கலில் சிக்கியுள்ளது. இந்தமுறை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் பாழாகிப் போன பேட்டரிகளை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பான வழக்கை ஜஸ்டின் குட்மன் என்ற நபர் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து இருக்கிறார். ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளில் உள்ள குறையை மறைத்து, மென்பொருள் அப்டேட்களின் மூலம் ஐபோன் வேகத்தை குறைத்து இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6s மாடல்களின் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்ககளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறைபாடு கொண்ட யூனிட்களில் ஆப்பிள் நிறுவனம் பேட்டரிகளை இலவசமாக மாற்றிக் கொடுக்கிறது. இந்த முறையும் ஐபோன்களை திராட்டில் செய்வதை ஒப்புக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6 மாடல்களின் செயல்திறனை பத்து சதவீதம் வரை குறைத்ததாக தெரிவித்து இருக்கிறது.