கொவிட் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை !!
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) இன்று அறிவித்துள்ளது.
தற்போது, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சந்தேகத்திற்கிடமான COVID-19- வைரஸ் நோயாளர்கள் நாடு முழுவதும் பதிவாகத் தொடங்கியுள்ளதுடன், அரசாங்க தகவல் திணைக்களம் COVID-19 இறப்புகளின் எண்ணிக்கை குறித்து தினசரி அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
சில வகையான வைரஸ்கள் மற்றும் மர்மமான கொவிட் தொற்றுகள் பரவுவதை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகிறது.
பாடசாலை போன்ற அமைப்புகளில் இவ்வாறான வைரஸ்கள் அதிகமாக பரவுகின்றன.
எனவே, முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், பொதுக்கூட்டங்களைத் தவிர்த்தல் போன்ற COVID-19 சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றும் போது மக்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும்“ என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.