இரு சமூகத்தினரிடையே மோதல்: நைஜீரியாவில் 30 பேர் படுகொலை!!
நைஜீரியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் வடக்கு பகுதியில் வாழ்கின்றனர், அதே சமயம் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த மோதலில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதுகுறித்து மத்திய நைஜீரியாவின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு ஆணையர் டான் மஞ்சங் கூறுகையில், ‘ஆடு மேய்க்கும் முஸ்லீம்களுக்கும், விவசாயிகளான கிறிஸ்துவர்களுக்கும் எல்லை பிரச்னை தொடர்பாக இரு தரப்புக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதைடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.