சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடிக்கவும்!!
கொவிட் 19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது, கணிசமான எண்ணிக்கையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் பதிவாகி வருவதாக சங்கம் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறப்புகளும் பதிவாவதால் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.