புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம்!!
மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற பிரதமர் மோடி முடிவு செய்தார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்று அவர் 2 மந்திரிகளின் இலாகாக்களை மாற்ற ஒப்புதல் அளித்தார். அதன்படி புதிய சட்டத்துறை மந்திரியாக அர்ஜூன் ராம் மேக்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மத்திய கலாசாரத்துறை இணை மந்திரியாக இருந்த அவருக்கு தற்போது சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
மத்திய சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் துறை மந்திரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மத்திய மந்திரி சபையில் 2 மந்திரிகளின் இலாகா மாற்றம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.