ஜெருசலேமில் யூதர்கள் பேரணி: 2000 போலீசார் குவிப்பு!!
ஜெருசலேமில் கலவரம் இன்றி யூதர்கள் பேரணி நடைபெறும் வகையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஜெருசலேம் தினத்தையொட்டி ஜெருசலேமில் யூத தேசியவாதிகள் நேற்று பேரணி நடத்தினார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஜெருசலேமின் பழைய நகரத்தின் பாரம்பரிய வழியான டமாஸ்கஸ் கேட் வழியாக யூதர்கள் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள், கலவரங்கள் இன்றி அணிவகுப்பு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இஸ்ரேல் அரசு சுமார் 2000 போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்தது. இந்த அணிவகுப்பானது பண்டிகை சார்ந்தது என்று கூறப்பட்டாலும், உள்ளூர் பாலஸ்தீனியர்களுக்கு எதிரானதாகவும் சிலர் மாற்ற முயன்றனர்.