மீண்டும் ரஷ்யா தாக்குதல் தீவிரம் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!!
உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதில், 29 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் சில இடங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. ரஷ்ய ராணுவம் கடல் மற்றும் நிலத்தில் உள்ள தளங்களில் இருந்து தொடர்ச்சியாக 30 ஏவுகணைகளை வீசியது. இதில் 29 ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று உக்ரைனின் ராணுவ தளபதி ஜெனரல் வாலேரி ஜலுசின்யி தெரிவித்தார். ஆனால், ஒரே ஒரு ஏவுகணை ஒடேசா பகுதியில் உள்ள தொழிற்சாலை கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் ஒருவர் பலியானார்.2 பேர் படுகாயமடைந்தனர். அதன் பின்னர் உக்ரைன் மீது டிரோன் தாக்குதலை ரஷ்யா தொடர்ந்தது. இதில் 4 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என உக்ரைன் விமான படை தெரிவித்துள்ளது.