ரூ.2 ஆயிரம் நோட்டு வாபஸ்: பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் !!
ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதற்கு தான் பிரதமர் படித்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார்.
இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார். அதனால் தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் சொல்லலாம். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்பட வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.