அமெரிக்காவின் தடைக்கு பதிலடியாக ரஸ்யா விதித்துள்ள புதிய தடை!
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யாவின் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மீதும், நபர்கள் மீதும் அமெரிக்கா தடை விதித்தது.
இந்தநிலையில், அமெரிக்க அரசு ரஷ்யா மீது விதித்த தடைகளுக்குப் பதிலடியாக ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு எதிராக புதிய தடை ஒன்றை விதித்துள்ளது.
அந்தவகையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், ரஷ்யாவைப் பற்றிப் பொய்த் தகவல்களைப் பரப்புவோர் மீதும் தடை விதித்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
இதில் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்கும் நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.