சுவிட்சர்லாந்தின் நியூசாடெல் மலைப்பகுதியில் விமான விபத்து- 3 பேர் உயிரிழப்பு!!
மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள நியூசாடெல் அடர்ந்த மரங்கள் மற்றும் மலைப் பகுதியில் நேற்று சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று அருகிலுள்ள சாக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் விமான நிலையத்திலிருந்து சுற்றுலா விமானமாக புறப்பட்டது. இந்நிலையில் நியூசாடெல் மலைப் பகுதியில் விமானம் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மற்றும் விமானி என மூன்று பேரும் உயிரிழந்தனர். நியூசாடெல் மலைகளின் சவாலான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, மீட்பு நடவடிக்கைகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.