சாராயத்தின் விலையால் தலை கிறுகிறது !!
திறந்த சந்தைகளில் விற்பனைச் செய்யப்படும் அதிவிசேட சாராயத்தின் விலை (கல் அரக்கு) 2,940 ரூபாயாகும். எனினும், அந்த சாராய போத்தலின் உண்மையான விலை 294 ரூபாயாகும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது.
அந்த 294 ரூபாயையும் கழித்தால், 2,646 ரூபாய் மீதப்படும். அந்த தொகையானது அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் மற்றும் வர்த்தகர்களின் இலாபம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன என கலால் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மதுபானங்களில் இருந்து அறவிப்படும் வரிகளில், கலால் வரி, வற்வரி, ஈட்டும்போது அறவிடப்படும் வரி ஆகிய வரிகள் மிக முக்கியமான வரிகளாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.