;
Athirady Tamil News

2,50,000 ஆண்டுக்கு முன்பே மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான சான்றுகள் ஸ்பெயினில் கண்டுபிடிப்பு!!

0

ஸ்பெயின் நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆதி கால மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. மனித வரலாற்றுக்கும் தீயின் பயன்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதன் முதன் முதலில் தீயை பயன்படுத்துவதற்கு தொடங்கினான் என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பு 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்பெயினில் ஆதி மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயற்கை அறிவியல் என்ற இதழில் வெளியான கட்டுரையில், ஸ்பெயின் நாட்டின் வால்டோகாரோஸ் என்ற பகுதியில், ஆதி மனிதன் வாழ்ந்தது மற்றும் உணவு சமைப்பதற்காக நெருப்பு மூட்டியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதி மனிதன் வாழ்ந்தது, தீயை பயன்படுத்தியதற்கான படிவங்கள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. அதே போல்,பாலூட்டி இனங்களின் படிமங்களும் கிடைத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.