தமிழ்நாடு முழுக்க ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!!
சென்னை, வேலூர், ஆரணி, குடியாத்தம் மாவட்டங்களை சேர்ந்த ஸ்விகி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். உணவு மற்றும் இதர பொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு டெலிவரி சேவை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஸ்விகி சேவையில் புதிதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஸ்லாட் முறையை திரும்ப பெற்று, ஏற்கனவே வழங்கிவந்த “டர்ன் ஒவர்” தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஸ்விகி உணவு டெலிவரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.