ஜனாதிபதிக்கு மொட்டு விடுத்த கோரிக்கை !!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஆளுநர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள ஆளுநர்களை மாற்ற வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்த பெயர்களில் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் ஒருவர் என்றும் வடமேல் மாகாண ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆளுநர்களை மாற்ற வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் திங்கட்கிழமை (15) பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
அந்த வெற்றிடங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கடந்த 17ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதியொருவர் பதவி விலகிய பின்னர் ஆளுநர்கள் பதவி விலகுவது சம்பிரதாயபூர்வமானது என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், சில ஆளுநர்களை பதவியிலிருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாணங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.