Sinopec Fuel Oil Lanka உடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!
இலங்கையில் பெற்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக சீனாவின் Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதற்கான நீண்ட கால ஒப்பந்தம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (22) காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.