பார் மேலாளரின் மேஜை டிராயரில் சுருண்டு கிடந்த மலைபாம்பு!!
ஆஸ்திரேலியாவில் பார் மேலாளர் ஒருவரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது.
பின்னர் மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார். பகிரப்பட்டதில் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வீடியோவை பார்த்து பய்ந்துவிட்டேன். எனது மேஜை டிராயரை பூட்டி விட்டு போக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.