மதுச்சாலைகளுக்கு பூட்டு !!
நாட்டிலுள்ள அனுமதி பெற்ற அனைத்து அனைத்து மதுபானசாலைகளும் பொசன் போயாவை முன்னிட்டு ஜூன் 3ஆம் திகதி மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் உள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை மூடப்படும் என்று திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச பொசன் விழா அடுத்த வாரம் அனுராதபுரம் மிஹிந்தலை ரஜமஹா விஹாரையில் நடைபெறவுள்ளதுடன், பொசன் வாரமாக மே 31ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 6ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.