மெட்டாவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ரூ.10,760 கோடி அபராதம் விதிப்பு!!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ரூ.10,760 கோடி அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பின் தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தை மெட்டா நிறுவனம் மீறிவிட்டதாக குற்றஞ்சாட்டி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர் தகவலை அமெரிக்காவுக்கு அனுப்ப கூடாது என மெட்டாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மட்டுமின்றி வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் செயலிகளும் அமெரிக்காவுக்கு தகவல்களை அனுப்ப கூடாது என தடை விதிக்கப்பட்டது.