;
Athirady Tamil News

மோதி, ஜெயா என பெயரிடப்பட்ட நாய்களை தத்தெடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்!!

0

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இத்தாலி மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் சுற்றுலா வந்தனர். அப்போது அங்குள்ள அஸ்ஸி காட் என்ற தெரு ஒன்றில் நடந்து சென்ற போது தெரு நாய்கள் சில ஒன்று சேர்ந்து பெண் நாய் ஒன்றை விரட்டி துன்புறுத்தியதை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி வேரா லாசரெட்டி பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெரு நாய்களை விரட்டி அதன் பிடியில் சிக்கிய பெண் நாயை மீட்டார். இதே போல வாரணாசியில் உள்ள முன்சிகாட் பகுதியில் நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டெல்பால் என்ற பயணி சென்ற போது அங்கும் ஒரு பெண் நாயை தெரு நாய்கள் கடித்து தாக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தெரு நாய்களை விரட்டி, பெண் நாயை மீட்டுள்ளார். பின்னர் வாரணாசி தளமாக கொண்டு இயங்கும் அனிமோடெல் கேர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளனர். இந்த நிறுவனம் நோய் வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் உடல் ஊனமுற்ற தெரு நாய்களை மீட்பு மற்றும் மறுவாழ்வுக்காக இயங்கும் நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தினர் ஐரோப்பிய சுற்றுலா பயணிகளால் மீட்கப்பட்ட 2 பெண் நாய்களுக்கும் மோதி, ஜெயா என பெயரிட்டு வளர்த்தனர். மேலும் அந்த 2 நாய்களுக்கும் தேவையான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டது. இதன் பயனாக பூரண குணமடைந்த மோடி என பெயரிடப்பட்ட நாயை இத்தாலியை சேர்ந்த வேரா லாசரெட்டி தத்தெடுத்தார். இதேபோல ஜெயா என பெயரிடப்பட்ட நாயை நெதர்லாந்தை சேர்ந்த மெரல் பொன்டேல்பால் தத்தெடுத்தார். இதைத்தொடர்ந்து இந்த 2 நாய்களையும் அவற்றை தத்தெடுத்தவர்களுடன் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை அனிமோடெல் கேர் டிரஸ்ட் மேற்கொண்டது. அதன்படி 2 நாய்களுக்கும் பாஸ்போர்ட் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் ஆகியவை பெறப்பட்டது.

அவற்றை இத்தாலி மற்றும் போர்ச்சுகல்லுக்கு அனுப்பி உள்ளனர். 6 மாத குழந்தையான ஜெயாவுக்கு தடுப்பூசி மற்றும் பிற சோதனைகளை முடிப்பதற்கான செயல்முறைகள் நடந்து வருகிறது. இதேபோல மோதி என்ற பெயரிடப்பட்ட 7 மாத நாய்க்கும் பாஸ்போர்ட் தயாராகி விட்டதாகவும், இன்னும் 3 மாதங்களில் அந்த நாய் இத்தாலிக்கு பறந்து செல்ல உள்ளதாகவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சுண்டிலிப் சென்குப்தா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.