உக்ரைனிய இராணுவத்தின் நாசவேலை உளவுக்குழு அதிரடி தாக்குதல் – நிலைகுலைந்து போன ரஷ்யா !!
ரஷ்யாவின் தென்மேற்கு பெல்கொரோட் பிராந்தியத்தில் நேற்று நடத்தப்பட்ட ஊடுருவல் தாக்குதலுக்கு உக்ரைனிய இராணுவத்துடன் இணைந்து செயற்படும் ரஷ்ய குழுவொன்று பொறுப்பேற்றுள்ளது.
உக்ரைனிய இராணுவத்தின் நாசவேலை உளவுக்குழு ரஷ்ய எல்லைக்குள் நுழைந்து கிரேவோரோன் நகரத்தைத் தாக்கியதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், இந்த பொறுப்பேற்கும் அறிவிப்பு வந்துள்ளது.
சுதந்திர ரஷ்யாவுக்கான படையணி மற்றும் ரஷ்ய தொண்டர் படை என்ற அடையாளங்களுடன் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களுக்கான உரிமை கோரல் வந்துள்ள நிலையில், தற்போது இந்தக் குழுக்களை அந்த இடங்களில் இருந்து அகற்றும் வகையில் தமது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நடத்தப்பட்டு வருவதாக ரஷ்ய படையினர் அறிவித்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் பலமுறை எறிகணைத் தாக்குதல்களும் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டிருந்தன.
இந்தத் தாக்குதல்களில் 12 பொதுமக்கள் காயமடைந்தனர். பல வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
இந்தத் தாக்குதல்கள் உக்ரைனிய படையினரின் ஒரு குழுவால் நடத்தப்பட்டதாக ரஷ்யா கூறினாலும் இந்தக் குழுவில் ரஷ்ய குடிமக்களே இருந்ததாக உக்ரைன் கூறுகிறது.
எது எவ்வாறோ உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போரால் ரஷ்யாவின் எல்லைப்புற தாக்குதல்களும் அதிகரித்து வருவதால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் ரஷ்ய குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன.