;
Athirady Tamil News

இனப் படுகொலையை அனுஷ்டிப்போம் !!

0

இலங்கையில் இடம் பெறாத இனப் படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப் படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (23) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து விசேட கூற்றை முன்வைத்த அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “மே 18 அன்று இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டு இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி கனடா நாட்டு பிரதமர், நாட்டை அவமதித்துள்ளார்.

இவ்வாறு இலங்கையை அவமதிக்கும். கனடாவின் வரலாற்று பக்கத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கனடா நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது. எனவே எதிர்ரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்’ என்று பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.