இங்கிலாந்து பொருளாதாரம் மந்தநிலையை அடையாது!!
அமெரிக்காவில் இயங்கி வரும் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின்படி இங்கிலாந்து பொருளாதாரம் இந்த ஆண்டு மந்தநிலையை அடையாது என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 0.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த இங்கிலாந்தின் பொருளாதாரம் இந்த ஆண்டு 0.4 சதவீதமாக உயரும். வரும் ஆண்டுகளில் பணவீக்கமானது நெகிழ்வற்ற நிலையில் அதிகமாக இருக்கும்.
2025ம் ஆண்டின் இடைப்பட்ட பகுதியில் 2 சதவீதம் என்ற பேங்க் ஆப் இங்கிலாந்தின் இலக்கை அடையலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.