ரஷ்யாவின் நடவடிக்கை – இராஜதந்திர ஆதரவை விரிவுபடுத்தும் ஜெலென்ஸ்கி..!
உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு இராஜதந்திர ஆதரவைப் பெறுவதற்காக வெளிநாட்டு விஜயங்களின் முக்கியத்துவம் செலுத்தி வருகிறார் .
இந்நிலையில் கடந்த வாரம், அவர் அரபு லீக் உச்சிமாநாட்டில்(சவுதி) கலந்துகொண்டபோது , மேற்கத்திய கூட்டாளிகளுக்கு அப்பால் தனது ஆதரவை அரபு நாடுகளில் விரிவுபடுத்த முயற்சிப்பதற்காகவும் குறித்த விஜயத்தில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து உலக செய்தி சேவை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
“15 மாதங்களுக்கு முன்பு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் , உக்ரைன் அரபு நாடுகளிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெறத் தவறிவிட்டது.
அரபு நாடுகள் பெரும்பாலும் குறித்த யுத்தத்தில் நடுநிலை வகிக்கின்றன. சவுதி அரேபியா மற்றும் பிற எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் உக்ரைனுடன் அன்பான உறவுகளைப் பேணி வருகின்றன.
பெரும்பாலான அரபு அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்க வாக்களித்திருந்தன. இந்நிலையில்தான் பெரும்பாலான அரபு லீக் உறுப்பு நாடுகள் இராஜதந்திர உறவை வலுப்படுத்த உக்ரைன் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எனினும் ரஷ்யாவிற்கு எதிராக விரோதமான எவ்வித பொருளாதார தடைகள் போன்ற எந்த நடவடிக்கையும் அரபு நாடுகள் எடுக்கவில்லை.
பெரும்பாலும், அரபு அதிகாரிகள் இந்தப் போரை மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யாவால் கையாள வேண்டிய ஐரோப்பிய நெருக்கடியாகக் கருதுகின்றனர்.
சூடான், சிரியா, யேமன், லிபியா மற்றும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் போன்ற அரபு உலகில் உள்ள மோதல்கள் மற்றும் கொந்தளிப்புகள் – உக்ரைன் போரை விட சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளுக்கு மிகவும் கவலை அளிக்கின்றன.என தெரிவிக்கப்பட்டுள்ளது.