;
Athirady Tamil News

கர்நாடகாவில் புதிய சர்ச்சை- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பார்க்க மாணவிகளை கட்டாயப்படுத்திய கல்லூரி நிர்வாகம்!!

0

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த மே 5-ந்தேதி நாடு முழுவதும் வெளியானது. ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பால், பெண்களை எப்படி கட்டாய மதமாற்றம் செய்து பணியமர்த்துகிறார்கள் என்பதை படம் காட்டுகிறது. இந்த திரைப்படத்தை சுதிப்தோ சென் எழுதி இயக்கியுள்ளார். மேலும் நடிகர் ஆதா ஷர்மா நடித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் படம் குறித்து பேசினார். இதனிடையே சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி மேற்கு வங்க அரசு படத்திற்கு தடை விதித்தது. ஆனால் கடந்த வாரம் உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததால், எதிர்ப்பை மீறி படம் வெளியானது. இந்த நிலையில், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டம் இல்கலில் உள்ளது ஸ்ரீ விஜய் மஹாந்தேஷ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி. நேற்று (புதன்கிழமை) பிற்பகல் வகுப்புகளை நிறுத்தி, சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைப் பார்க்குமாறு அனைத்து மாணவிகளுக்கும் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி, கடந்த 23-ந்தேதி இக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே.சி.தாஸ் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (24-ந்தேதி) ஸ்ரீநிவாஸ் டாக்கீஸில் மதியம் 12 மணி முதல் அனைத்து இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (பி.ஏ.எம்.எஸ்) மாணவிகள் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவிகள் திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கும் வகையில் பிற்பகல் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், எனவே அனைத்து மாணவிகளும் கட்டாயம் படத்தை பார்க்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.