;
Athirady Tamil News

அங்க எல்லாரும் வந்திருந்தாங்க, ஆனால்.. எதிர்கட்சிகளை சூசகமாக சாடிய பிரதமர் மோடி!!

0

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து இருக்கும் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி சூசகமாக சாடியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியை வரவேற்க கூடியிருந்த பொது மக்களிடையே பிரதமர் மோடி பேசினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சமூக நிகழ்வு குறித்து கூறும் போது, “முன்னாள் பிரதமர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஆளும் கட்சியினர் வந்திருந்தனர். சமூக நிகழ்வில் அனைவரும் கூட்டாக கலந்து கொண்டிருந்தனர்,” என்று தெரிவித்தார். பெருந்தொற்று காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் மத்திய அரசை கண்டித்த விவகாரம் குறித்து பேசும் போது, “பெருந்தொற்று காலக்கட்டத்திலும், மோடி எதற்காக உலகிற்கு தடுப்பூசிகளை கொடுக்கிறார் என்று கேள்வி எழுப்பினர். நினைவில் கொள்ளுங்கள், இது புத்தர் மற்றும் காந்தியின் மண். நாம் நமது எதிரிகளுக்கும் நன்மை பயக்க வேண்டும்.

நாம் இந்த சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட சமூகம்,” என்று தெரிவித்தார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 20 எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன. எதிர்கட்சிகளின் அறிவிப்புக்கு ஆளும் பாஜக மற்றும் தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்கட்சிகளின் முடிவு, “தலைசிறந்த தேசத்தின் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை அவமதிக்கும் செயல்,” என்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.