கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மகனை சரமாரியாக தாக்கிய தாய்- 3 பேர் கைது!!
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது. இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.
அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.