ரஷ்யாவுக்கு தலையிடியாக மாறிய கிளர்ச்சிக் குழு !!
ரஷ்யாவிற்குள் தொடர்ந்தும் கிளர்ச்சிகளை செய்வோம் என எல்லைப் பகுதியில் ஊடுருவல் தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின் கட்டளைத் தளபதி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய தன்னார்வப் படை என்ற குழுவின் கட்டளைத் தளபதியாக தன்னை அடையாளப்படுத்திய டெனிஸ் கபாஸ்ரின் என்பவர் சூளுரைத்துள்ளார்.
கடும்போக்கு வலதுசாரி ரஷ்ய தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தியுள்ள ரஷ்ய தன்னார்வப் படை, மீண்டும் ரஷ்யாவில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மொஸ்கோவில் பிறந்த டெனிஸ் கபாஸ்ரின் எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் ரஷ்யாவின் புதிய பிரதேசங்களில் தாக்குதல் நடத்துவோம் எனவும் ஒரிரு நாட்கள் பொறுமையாக இருங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
உக்ரைனில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட டெனிஸ் கபாஸ்ரின், ரஷ்யாவில் மேற்கொண்ட தாக்குதல்களின் மூலம் கிடைத்த பிரதிபலன் குறித்து திருப்தி அடைவதாக தெரிவித்துள்ளார்.
சில ஆயுத தளவாடங்களை கைப்பற்றியுள்ளதுடன், சிலரை சிறைபிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் தமது தரப்பில் இருவர் மாத்திரமே காயமடைந்துள்ளதாக கூறும் டெனிஸ் கபாஸ்ரின், ரஷ்ய தரப்பு கூறுவதைப் போன்று 70 பேர் கொல்லப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.