உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யாவின் கூலிப்படை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பஹ்மூத் நகரில் இருந்து தமது படையினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக ரஷ்ய ஆதரவு வாக்னர் கூலிப் படையின் தலைவர் யெவ்ஜெனி பிறிகோஷஜின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதியுடன் நகரின் கட்டுப்பாடுகள் ரஷ்ய இராணுவத்திடம் முழுமையாக கையளிக்கப்படும் எனவும் யெவ்ஜெனி பிறிகோஷஜின் சூளுரைத்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தினரால் பஹ்மூத் நகரின் நிலைமைகளை சமாளிக்க முடியாத பட்சத்தில் மீண்டும் தமது படைகள் பஹ்மூத் நகருக்கு திரும்பும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பஹ்மூத் நகருக்கான போரானது மிக நீண்டதும் இரத்தகளரிமிக்கதுமாக காணப்பட்டிருந்தது.
இந்த நகரை கைப்பற்றுவதற்கான போரில் தமது படையை சேர்ந்த 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் ரஷ்ய இராணுவத்திற்கு வெடிபொருட்களை விட்டு செல்லுமாறும் தனது படையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யப் படையினருக்கு உதவும் வகையில் வாக்னர் கூலிப் படையினர் பஹ்மூத் நகரில் நிலைகொண்டிருப்பார்கள் எனவும் இராணுவ சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் போது அவர்கள் உதவி வழங்குவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் விமானிகளுக்கு ஏப்.16 ரக விமானங்களை பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்க முடியும் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.
உக்ரைய்னுக்கான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் விமானங்களுக்கு எங்கு பயிற்சிகளை வழங்குவது என்பது குறித்து உலக நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் காணொளி காட்சி வழியாக நடைபெற்ற சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே 120 மில்லியன் டொலர்கள் என பெறுமதியான இராணுவ உபகரணங்களை உக்ரைய்னுக்கு அனுப்படவுள்ளதாக பின்லாந்து அரசாங்கமும் அறிவித்துள்ளது.