‘ஆம்’ பொத்தானை அழுத்தியதால் சிக்கல் !!
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அரசாங்கத்தின் யோசணைக்கு ஆதரவு தெரிவித்த வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட எம்.பியான வடிவேல் சுரேஷ் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இது கட்சியின் தீர்மானத்துக்கு எதிரானது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துடன், கட்சி கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.