500 கிமீ ரேஞ்ச் வழங்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!!
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் i5 செடான் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பிஎம்டபிள்யூ பிரபல செடான் சீரிசில் முழு எலெக்ட்ரிக் வடிவம் பெற்ற முதல் கார் இது ஆகும். இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய i5 மாடல் iX எஸ்யுவி மற்றும் i7 செடான் மாடல்கள் வரிசையில் இணைகிறது. ஆல் எலெக்ட்ரிக் i5 மாடல் பல்வேறு ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ i5 ஸ்டாண்டர்டு மாடல் சிங்கில் மோட்டார் லே-அவுட் உடன் கிடைக்கிறது. அதிக செயல்திறன் எதிர்பார்ப்போருக்காக டுவின் மோட்டார் வேரியண்ட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ i5 மாடலில் 81.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 72 பேட்டரி செல்கள், 12 செல்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய பிஎம்டபிள்யூ i5 காரின் உள்புறம் அதன் ஐசி எஞ்சின் வேரியண்டில் உள்ளதை போன்ற அளவீடுகள் உள்ளன. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 308 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 193 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.