புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தேவகவுடா பங்கேற்பு!!
டெல்லியில் 28-ந்தேதி திறக்கப்படும் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதை ஏற்று பல கட்சிகள் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. அந்த வரிசையில் மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவும் இந்த விழாவில் பங்கேற்பதாக அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இது நாட்டின் சொத்து. யாருடைய தனிப்பட்ட விஷயமும் அல்ல’ என தெரிவித்தார். இதைப்போல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறாத பகுஜன் சமாஜ், பிஜூ ஜனதாதளம், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட 7 கட்சிகளின் பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்கின்றனர். அத்துடன் பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த 18 கட்சிகளும் பங்கேற்க உள்ளதால் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25 கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.